tamilnadu

img

இத்தாலியில் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளுக்கும் தடை

கொரோனா வைரஸ் எதிரொலி 

சீனாவிலிருந்து படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா எனும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது 2-ஆம் கட்ட ஆட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவினாலும் சீனாவுக்கு அடுத்த படியாக அதிக பாதிப்பைச் சந்தித்தது  இத்தாலி தான். அங்கு இதுவரை 400-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். 9,000-க்கும் அதிகமானோர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு நடைபெற்று வந்த அனைத்து வகையான நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு தொடர்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.    உலகப் புகழ்பெற்ற கிளப் கால்பந்து  தொடரான “சிரி ஏ” தொடர் ரசிகர்கள் இல்லாமல் வெறும் மைதானத்தில் நடை பெற்று வந்த நிலையில் அந்த தொட ருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் வாய்ப்பு எப்படி?

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் தொடரின் 32-வது சீசன் வரும் ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது.  இந்த தொடருக்கான அனைத்து வேலைப்பாடுகளும் நிறைவு பெற்று ஒலிம்பிக் கிராமம் தயார் நிலையில் உள்ளது. ஆனால் கொரோனா வைரஸின் தாக்கத்தைப் பொறுத்தே ஒலிம்பிக் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரம் முழுமையாக வெளியாகவில்லை. கொரோனா  தொடர்பான அனைத்து விஷயங்களும் மறைமுகமாகத் தான் உள்ளது. அங்கு நிகழும் விஷயங்கள் பற்றித் தெரிந்தால் தான் ஒலிம்பிக் தொடர் நடக்கும் வாய்ப்பு பற்றி கருத்து கூற முடியும்.

இந்தியன் வேல்ஸ் தொடர் ரத்து

இத்தாலியிலிருந்து படிப்படியாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. ஐரோப்பா கண்டத்தில் இத்தாலிக்கு அதிக சேதாரத்தைச் சந்தித்தது பிரான்ஸ் தான். அங்கு இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ள னர். இதனால் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்சு ஓபன் தொடர் ரத்து செய்ய அதிக வாய்ப்புள்ளதாகச் செய்திகள் வெளியாகி யுள்ளன. இதே போலப் பிரிட்டனின் விம்பிள்டன் டென்னிஸ் தொடரும் கொரோனா தாக்குதலுக்கு ஏற்ப திட்டமிட்ட படி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் சீரான வேகத்தில் பரவி வருகிறது. அங்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ள நிலையில், இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடர் மற்றும் பேஸ்பால் டென்னிஸ் தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.



 

;